வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!!
கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. தினமும் அரை லிட்டர் பால், 3 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் என இரு கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளில் கர்நாடக தேர்தல் களை கட்டி இன்று தேர்தல் நடை பெற்று கொண்டிருக்கிறது.
சர்கார் படத்தில் வருவது போன்று வெளிநாட்டில் இருந்து ஒட்டு போட வந்தவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக பலரும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராகவேந்திர சேத். இவர் பணி காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வருகிறார்.
இவர் தனது ஓட்டை போடுவதற்காக ரூ. 1.50 லட்சம் செலவு செய்து கர்நாடகா வந்துள்ளார். அனால் அவரால் ஓட்டு போட முடியவில்லை. அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. 14000 கி.மீ. பயணம் செய்து வந்தும், ஓட்டு போட முடியவில்லை என அவர் ஏமாற்றம் அடைந்தார். இதை பற்றி தான் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடப் போவதாக தெரிவித்துள்ளார்.