மதபிரிவினை தூண்டியதாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு! நடந்தது என்ன.?

Photo of author

By Jayachandiran

மதபிரிவினை தூண்டியதாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு! நடந்தது என்ன.?

Jayachandiran

மதபிரிவினை தூண்டியதாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு! நடந்தது என்ன.?

மதங்களுக்கு இடையே பிரிவினை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாகவே முன்வந்து சிகிச்சை பெறுமாறு அரசு கூறியது. இதன் பின்னர் மாநாட்டில் பங்கேற்ற பலரும் மருத்துவ தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இச்சம்பவம் இணையத்தில் சர்சையை உண்டாக்கியது.

இதையடுத்து நிசாமுதீன் மாநாட்டிற்கு சென்ற இஸ்லாமியர்களின் மீது கொரோனா தொற்று பரப்பியதாக இணையத்தில் பலரும் விவாதிக்க தொடங்கினர். கொரோனா பாதிப்பை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது திணிக்க வேண்டாம் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இணையத்தில் அரசியல் மற்றும் இந்திய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிடும் மாரிதாஸ் கொரோனா பாதிப்பு குறித்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சம்பந்தமாக திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கொரோனா தொற்று குறித்தும் மேலப்பாளையத்தில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகள் குறித்தும் ஒன்றுபடுத்தி சமூக வலைத்தளத்தில் இரு மதங்களுக்கிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது 292ஏ, 295ஏ, 505 (2), 67பி என்ற நான்கு இந்திய சட்டப் பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.