சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!!

0
122
#image_title

சுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!!

பீர்க்கங்காய் தோல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.சொறி,சிரங்கு,புண், காய்ச்சல் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.கண் பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இந்த ர்க்கங்காய் தோல் சட்னியை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

*பீர்க்கங்காய் தோல் – ஒரு கைப்பிடி அளவு

*கடலை பருப்பு – 1 ஸ்பூன்

*உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

*எள்ளு – 1 ஸ்பூன்

*தேங்காய் – 1 கப் (துருவியது)

*வர மிளகாய் – 6

தாளிக்க தேவையான பொருட்கள்:-

*எண்ணெய் – 1 ஸ்பூன்

*கடுகு – 1/4 ஸ்பூன்

உளுந்து – 1/4ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மிளகாய் – 2

செய்முறை:-

1.பீர்க்கங்காய் தோலை நன்றாக சீவி அவற்றை நன்கு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் கடாய் வைத்து அவை சூடாக்கி பிறகு எண்ணெய் சேர்த்து உளுந்து,கடலை பருப்பு, எள்ளு,தேங்காயை ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்து வேண்டும்.

3.பின்னர் பீர்க்கங்காய் தோலை நன்றாக வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

4.அனைத்தையும் நன்றாக ஆறவைக்க வேண்டும்.

5.ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஆற வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

6.இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு,உளுந்து பொரிந்தவுடன் கறிவேப்பிலை,மிளகாய் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்துவிட வேண்டும்.

Previous articleஅனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!
Next articleவேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது!