சுவையான சிக்கன் நூடுல்ஸ்! கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்!

Photo of author

By Parthipan K

சுவையான சிக்கன் நூடுல்ஸ்! கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் துரித உணவுகளையே விரும்புகின்றனர் அந்த வகையில் அதிகம் விரும்பி உண்பது சிக்கன் நூடுல்ஸ் தான். ஒரு சிலர் சிக்கன் நூடுல்ஸ் செய்வது மிக கடினம் என்றும் எண்ணிக் கொண்டுள்ளனர். அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் இத்தன நூடுல்ஸ் எளிய முறையில் எவ்வாறு செய்வது என்பது காணலாம்.

தேவையான பொருட்கள் :முதலில் சிக்கன்200 கிராம், லூஸ் நூடுல்ஸ்2 பாக்கெட் , நறுக்கிய வெங்காயம்200 கிராம் , பச்சை மிளகாய் மூன்று , மிளகு தூள் ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன் , சோயா சாஸ் இரண்டு டீஸ்பூன் , தக்காளி சாஸ் இரண்டு டீஸ்பூன், உப்புதேவையான அளவு ,எண்ணெய்தேவையான அளவு . அனைத்து பொருட்களையும் சரியானவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை :

சிக்கன் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

மேலும் அகலமான ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சூடானதும், அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

 

அதன் பிறகு வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும். பிறகு சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.