இன்றும் வாயுத்தொல்லைக்கும், அசீரணத்துக்கும் பூண்டினை வேக வைத்து உண்ணும் பழக்கம் நம்மில் பல பேரிடம் உண்டு. அந்த அளவுக்கு பூண்டு பல மருத்துவ நன்மைகளை வழங்குவதை அறிந்ததால் தான், உலக அளவில் அதன் பயன்பாடு பல பில்லியன் அளவுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சரி பூண்டைவைத்து எப்படி பூண்டு முறுக்கு செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
அரிசி – 2 கப்
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 6
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு, நீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து அதை அரிசி மாவில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மாவாக பிசைய வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு பிசைந்த மாவை தேன் குழல் முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயிலிட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பூண்டு முறுக்கு ரெடி.