சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி!..எப்படி செய்யணும் வாங்க பார்க்கலாம்!..
முதலில் வெஜிடபுள் பிரியாணி செய்ய தேவையான பொருள்களை எடுத்துக்கொள்வோம். பாஸ்மதி அரிசி – 2 கப், சிறிய உருளைக்கிழங்கு – 6, கேரட் – 2, நறுக்கிய முட்டைகோஸ் – 2 கப், டோஃபு அல்லது பனீர் – 250 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சைப்பட்டாணி – ஒரு கப், பச்சை மிளகாய் – 5, ஏலக்காய் – 9, கிராம்பு – 5, கறுவாப்பட்டை – 4 துண்டு மற்றும் ஒரு சிறிய துண்டு, பிரிஞ்சி இலை – 2, முந்திரி – 20, பிளம்ஸ்- 35 கிராம், கொத்தமல்லித்தழை – 1/4 கப், உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, எண்ணெய் – பொரிப்பதற்கு, பட்டர் அல்லது நெய் – 3 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள் – சிறிது ஆகியவை தேவைப்படும் பொருட்கள் ஆகும்.
செய்வது பார்க்கலாம் வாங்க , பட்டாணியை சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை களைந்து ஊற வைத்துக் கொள்ளவும்.தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை நீளமானத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளமான சிறிய மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். கேரட்டை ஒரு அங்குல நீளமான மெல்லிய துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.ரைஸ் குக்கரில் ஊற வைத்த அரிசியை போட்டு மஞ்சள் தூள், கறுவாப்பட்டை, 3 ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய விடாமல் வேக வைத்துக் கொள்ளவும். அரிசி அரைப்பதம் வெந்ததும் அதில் சிறிது உப்பு, 2 மேசைக்கரண்டி நெய் அல்லது பட்டர் சேர்த்து கிளறி விடவும்.நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி பொரித்தெடுத்துக் கொள்ளவும்.அதேப் போல் வெங்காயம், டோஃபு அல்லது பனீரையும் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து பிரட்டி பொரித்தெடுக்கவும்.வாணலியில் ஏலக்காய், கிராம்பு, கறுவாபட்டையை போட்டு வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி செய்துக் கொள்ளவும்.அதே வாணலியில் பட்டர் அல்லது நெய் ஊற்றி இரண்டாக உடைத்த முந்திரி, பிளம்ஸை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.சுவையான கம கம வென வெஜிடபுள் பிரியாணி தயார்.இதனை பரிமாறும் தட்டில் வைத்து மேலே கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.