சுவையான கேழ்வரகு பர்பி – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?
கேழ்வரகில் பல மருத்துவ குணம் உள்ளது. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். உடல் எலும்புக்குத் தேவையான வலுவை சேர்க்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை நன்றாக சாப்பிட்டு வரலாம். அரிசி சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழை குடித்து வரலாம்.
சரி.. கேழ்வரகை வைத்து எப்படி சுவையாக பர்பி செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 2 கப்
ரவை – அரை கப்
வெல்லம் – 2 கப்
நெய் – தேவைக்கேற்ப
முந்திரி – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் சேர்த்து, அதில், கேழ்வரகு மாவினை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர், ரவை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து கரைத்து வடிகட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை கேழ்வரகு மாவில் நன்றாக கைவிடாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கட்டிகள் எதுவும் இல்லாமல் குறைவான தீயில் வைத்து கலக்க வேண்டும்.
வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவும், ரவையும் வெந்துவரும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
மாவு நன்றாக வெந்ததும் சிறிது நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.
இதன் பின்னர் அதில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி சேர்த்து, ஒரு நெய் தடவிய தட்டில் சேர்க்க வேண்டும்.
சிறிது சூடு ஆறிய பிறகு வெட்டி பரிமாறினால் சுவையான கேழ்வரகு பர்பி ரெடி