திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி?

0
86
#image_title

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி?

மலிவாக கிடைக்கும் பப்பாளி பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் பப்பாளி பழம் சிறந்தது. பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையையும் கொடுக்கிறது.

பப்பாளி பழத்தில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, உட்பட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும், பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், இதய நோய் போன்ற பலவிதமான நோய்கள் குணமாகும். பப்பாளி பழம் ஜீரண சக்தியை கொடுக்கும். அஜீரணத்தை குணமாக்கும். பப்பாளி பழம் சாப்பட்டு வந்தால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

சரி வாங்க.. பப்பாளியை வைத்து எப்படி பப்பாளி அல்வா செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையானப் பொருட்கள்:

பப்பாளி பழ துண்டுகள் – 4 கப்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

சர்க்கரை – 2 கப்

சோள மாவு – 4 ஸ்பூன்

நெய் – 8 தேவையான அளவு

முந்திரி – தேவையான அளவு

பாதாம் பருப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பப்பாளி பழத்தை தோல் நீக்கி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், ஒரு மிக்ஸியில் நறுக்கிய பப்பாளி பழத்தை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கொஞ்சம் நெய் சேர்த்து சூடானதும், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், அதே பாத்திரத்தில் அரைத்த பப்பாளி பழத்தை சேர்த்து நன்றாக கிறவிவிடுங்கள்.

பச்சை வாசம் போகும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருங்கள்.

இதன் பின்னர், அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளருங்கள்.

இதன் பிறகு, ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதை பப்பாளி பழத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கிளறிக்கொண்டே இருங்கள்.

கடைசியாக கொஞ்சம் நெய் விட்டு, வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் பருப்பை சேர்த்து இறக்கினால் சுவையான பப்பாளி பழ அல்வா ரெடி.

Previous articleபால் கொழுக்கட்டை இப்படி செய்து விநாயகருக்கு விருந்து வையுங்கள்!!
Next articleமுடி அசுர வேகத்தில் வளர ஈஸியான 9 டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!!