ருசியான இறால் கட்லட் – சுலபமாக செய்வது எப்படி?

0
24
#image_title

ருசியான இறால் கட்லட் – சுலபமாக செய்வது எப்படி?

கடல் இறாலில் அதிக அளவு புரதச்சத்து அடங்கியுள்ளன. அது தவிர, வைட்டமின் டி உள்ளது. மேலும், உடல் எடையை குறைக்க இறால் உதவி செய்கிறது. அதனால், கடல் உணவை விரும்பி உண்ணலாம். மேலும், இறால் சாப்பிடுவதால் சருமம் அழகாக மாறும். இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் உங்கள் சருமம் மிளிரும்.

சரி சுவையாக, ருசியாக இறால் கட்லட் எப்படி செய்யலாம்ன்னு பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

இறால் – 1 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2 ( பொடியாக நறுக்கியது )
பெரிய வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
கொத்தமல்லி – சிறிதளவு
சோள மாவு – 1 கப்
பிரட் தூள் – 2 கப்
மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – ½ஸ்பூன்
உருளை கிழங்கு – 4 ( வேக வைத்து மசித்தது )
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் இறாலைப் போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.
இறால் நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்து ஆற வைக்க வேண்டும்.
பின்னர் ஒருமிக்ஸியில் இறாலைப்போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வெந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதன் பிறகு, மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, வேக வைத்து மசித்து வைத்த உருளைகிழங்கை சேர்க்க வேண்டும்.
பின்னர், கொத்தமல்லி தழை தூவி கிளறி விட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சோள மாவு சேர்த்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
சூடு ஆறியதும் இறால் மசாலாவை கட்லட் வடிவத்தில் தட்டிக் கொண்டு, சோள மாவு கலவையில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் தட்டி வைத்த கட்லெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்தால் சுவையான இறால் கட்லட் ரெடி.

author avatar
Gayathri