சுவையான திணை அப்பம் – செய்வது எப்படி?
திணை அரிசியில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. திணை அரிசியை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும். மேலும், திணையில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. மேலும், கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
சரி.. திணை அரிசியை வைத்த எப்படி அப்பம் செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
திணை – 4 கப்
இட்லி அரிசி – அரை கப்
வெள்ளை உளுந்து – 4 மேசைக்கரண்டி
வெந்தயம் – 2 கரண்டி
தேங்காய்ப் பூ – 1 கப்
வடித்த சாதம் – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 2 கரண்டி
கஞ்சி காய்ச்ச :
பச்சரிசி – 4 கரண்டி தனியாக ஊற வைக்க வேண்டும்.
செய்முறை
முதலில் திணையுடன், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் அதில் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைத்து எடுக்க வேண்டும்.
மேலும், மிக்சியில் ஊற வைத்த பச்சரிசியை போட்டு நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.
சிறிது நேரத்தில் சூடேறியதும் மாவு பசை போன்ற பதத்திற்கு இறுக தொடங்கும். அப்போது அடுப்பிலிருந்து எடுத்து விட வேண்டும்.
சூடு தணிந்ததும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள அப்ப மாவுடன் உப்பு சேர்த்து கலக்கி, மாவை புளிக்க விட வேண்டும்.
மறுநாள் மாவு புளித்து நன்றாக பொங்கி வந்திருக்கும். மாவுடன் 2 கரண்டி சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்க வேண்டும்.
பின்னர், அப்ப சட்டியில் மாவை ஊற்றி மூடி வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான அப்பம் ரெடி.