Home National அசுர வேகத்தில் பரவும் டெல்டா பிளஸ்! தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த கடிதம்!

அசுர வேகத்தில் பரவும் டெல்டா பிளஸ்! தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த கடிதம்!

0
அசுர வேகத்தில் பரவும் டெல்டா பிளஸ்! தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த கடிதம்!

தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த டெல்டா ப்ளஸ் வைரஸானது அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள உரு மாற்றமடைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் இது 80% உருமாறி இருக்கிறது.

இந்தியாவில் மொத்தம் 50 பேருக்கு இதுவரை டெல்டா ப்ளஸ் ஒருவகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே 9 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் போஷன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த டெல்டா பிளஸ் வைரஸானது மிகவும் அதிகமாக பரவும் தன்மையுடையது. பாதித்த சில நாட்களிலேயே உடல் மிகவும் கவலைக்கிடமாக மாறிவிடும் என்று தகவல்கள் வந்துள்ளன. அதனால் சென்னை மதுரை காஞ்சிபுரம் பகுதிகளில் அதிகமான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. தீவிர பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சொல்லியுள்ளது.

டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும், கொரோனா தீவிர பரிசோதனை செய்யவேண்டுமென்றும், மக்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கூடுதலான முன்னேற்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
Kowsalya