சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!!

Photo of author

By Vijay

சீமானை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் திருநெல்வேலியில் இருந்து 1000 காங்கிரஸ் தொண்டர்கள் சீமானின் வீட்டை முற்றுகையிடுவோம் என்றும், தமிழகம் மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி அனைத்து மக்களுக்காகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக நாம் தமிழர் சமூக இயக்கம் என்று ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் சீமான், அன்னை சோனியாகாந்தி அவர்களையும், காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களையும் மிக அவதூறாக இவர் பேசிய பேச்சை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், சீமானை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களை ஒன்று திரட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அவர்கள் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனார் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் தொண்டர்கள் சீமானின் வீட்டை முற்றுகையிடுவோம் என தெரிவித்துள்ளார்.