10 ரூபாய்க்கு டீ-ஷர்ட்…விளம்பரத்தால் வினையை தேடிக்கொண்ட வியாபாரி..!!!

0
66

மதுரை :

வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் வியாபாரிகள் பலரும் பல்வேறு விதமான வியாபார யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.பரிசு பொருட்கள் வழங்குவது,விலை குறைப்பது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர்.T-Shirt To Buy Sales Booth - Free photo on Pixabay

அதுபோல இங்கு மதுரையில் வியாபாரி ஒருவர் 10 ரூபாய்க்கு டீ-சர்ட் விற்பனை செய்யப்படும் என்று செய்யப்பட்ட விளம்பரத்தால் ஜவுளிக் கடையில் மக்கள் அதிகளவில் கூடினர்.இதனால் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று கடையை காவல்துறையினர் பூட்டிவிட்டனர்.Popular T-shirts @ wholesale price buy direct from wholesalers

மதுரை கோ.புதூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை நிர்வாகம், தங்களது இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சலுகை விலையில் ஆடைகள் விற்பனை செய்வதாக விளம்பரம் கொடுத்திருந்தது.

அதன்படி, டீ சர்ட், சட்டை உள்ளிட்ட ஆடைகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று விளம்பரம் செய்திருந்தது. 10 ரூபாய் டீ சர்ட் என்ற தகவல் மதுரை மாநகரில் காட்டுத் தீயாக பரவவே,ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலை முதலே கடையின் முன்னால் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சலுகை விலையில் துணிகளை பெற்றுச் சென்றனர்.

பொதுவாக ஆஃபர் என்றாலே அனைவரும் அலைகடலென திரள்வது வழக்கம்.அதிலும் 10 ரூபாய்க்கு ஆடைகள் தருகிறார்கள் என்றால் சொல்லவா வேணும்.இனிப்பு பண்டத்தை ஈ மொய்ப்பது போன்று மொய்த்து விடுவார்கள்.

ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் அங்கு தனிமனித இடைவெளி போன்ற கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியது . அதுமட்டுமல்லாது அப்பகுதியில் மக்கள் கூடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.Now, hooters to warn UP traders to shut shop before Covid-19 night curfew -  Coronavirus Outbreak News

இதையடுத்து அரசின் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, கடையின் உரிமையாளரை எச்சரித்த போலீசார் கடையை இழுத்து பூட்டிச் சென்றனர்.இந்த கொரோனா பெரும் தொற்று காலத்தில் இப்படி அலட்சியமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்க கூடியதாகும் .

author avatar
Parthipan K