மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழக அரசுக்கு 2152 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடானது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனை தமிழகத்தை சேர்ந்த பல கட்சிகளும் கட்சியினுடைய தலைவர்களும் எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தவெக கட்சித் தலைவர் விஜய் போன்றவர்கள் இந்த மும்மொழி கொள்கையை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நாளை ( பிப்ரவரி 18 ) மாலை 4 மணி அளவில் திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவெக உள்ள கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றனர்.
மும்மொழி கொள்கையை எதிர்த்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டமானது திமுக தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக பிப்ரவரி 18 ஆகிய நாளை மாலை 4 மணி அளவில் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.