சீமான், பெரியார் கூறியது தான்! இதற்கு கலைஞர் தான் காரணம்!!

0
4
That's what Seeman and Periyar said! The reason for this is the artist!!
That's what Seeman and Periyar said! The reason for this is the artist!!

சமீபத்தில் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் இணைந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, நான் பெரியார் பற்றி அவதூறாக கூறவில்லை. பெரியார் கூறியதைதான் கூறினேன். இதற்காக எத்தனை வழக்குகள் என் மேல் போட்டாலும் நான் சோர்வடைய மாட்டேன். வழக்குகளை எல்லா இடங்களிலும் போட்டு என்னை சோர்வடைய திசை திருப்புகிறது நடப்பாச்சி.

அது ஒருபோதும் நடக்காது! எத்தனை வழக்குகள் இருப்பினும் அதை நான் முறியடிப்பேன். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எவ்வளவு பெரிய பிரச்சனையே ஆனாலும் எதிர்கொள்வேன். அனைத்து வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்று உள்ளார். வருகின்ற செவ்வாய்க் கிழமை ஒரு வழக்கிற்காக விக்கிரவாண்டி செல்ல வேண்டும். ஒவ்வொரு வழக்காக நான் தீர்த்து முடிப்பேன். நான் ஒருவன் தானே இருக்கிறேன். டெக்னாலஜி வைத்து என்னை போல் மற்றொரு ஆளை உருவாக்க முடியாது அல்லவா! ஒவ்வொரு இடத்திலும் என் பக்கம் உள்ள கருத்துக்களை எடுத்துரைத்து ஒவ்வொரு பிரச்சினையாக தீர்ப்பேன். என்னை ஒன்றரை வருடம் சிறையிட்டு பெருந்தலைவர்களை பற்றி படிக்க வைத்தது கலைஞர் தான். அவரால்தான் நான் ஞானம் பெற்றேன். தற்சமயம் எனக்கு படிக்க அவ்வளவு நேரம் கிடையாது. சிறைக்கு சென்றால் இன்னும் அரசியல் கற்பேன் என்று சீமான் கூறியுள்ளார்.

Previous articleமும்மொழி கொள்கையை எதிர்த்து நாளை நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம்!! எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்கின்றன தெரியுமா!!
Next articleஒரு கோடி வரை கடனுதவி!! முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்!!