கோவையில் வேகமாக படையெடுக்கும் டெங்கு காய்ச்சல்? பீதியில் பொதுமக்கள்!!.
பருவ மழை ஆரம்பமாகியுள்ளதால், கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. டெங்கு நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மக்கள் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். அருகில் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது.
என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரமாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை தமிழகத்தில் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையின் ஒரு சில இடங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியது ?கடந்த சில தினங்களாக மழை பொழிவு அதிகம் உள்ளதால், தேங்கும் நீரில் ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. வீட்டை சுற்றி மழை நீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும். பழைய டயர், பாட்டில்கள், பிளாஸ்டிக் குடங்கள் ஆகிய இடங்களில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குடியிருப்பு, தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் வாயிலாக, ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனையும் அபராதம் விதிக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு மருந்து ஊற்றுதல், மக்களுக்கு விழிப்புணர்வு போன்ற பணி மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.