சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு!
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.மேலும் அந்த கோவிலில் பிரதோஷம்,பவுர்ணமி ,அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்னதாகவே வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.
அந்த வகையில் சதுரகிரி மலையில் மழை பெய்தது.அதனால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.அதனால் தாணிப்பாறை வனத்துறை நுழைவாயில் முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆனால் பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.அந்த ஏற்பாடுகள் அனைத்துமே கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மழை வராமல் இருந்திருந்தால் பிரதோஷம் சிறப்பு வழிபாட்டை நாங்கள் தரிசனம் செய்திருப்போம் என பக்தர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.