ஜப்பானில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

0
126
ஜப்பான் நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என பெயரிடப்பட்ட சூறாவளி நெருங்கி வருகிறது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ. இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீ. வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. ஜப்பானின் கியூசூ தீவை சூறாவளி தாக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்து 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது.
Previous articleஅதிவேக விமானம் சோதனையின் வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!
Next articleசீனாவின் விண்வெளி திட்டத்தில் மிகப்பெரிய மைல்கல்