தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு?
குஜராத்தின் தாகூர் மாவட்டத்திலுள்ள மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று அவ்வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரத்லம் மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு ஓடியது. இதனால் ரயிலின் மீது செல்லும் மின்கம்பிகளும் உடைந்தது.இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதிகளிலும் ரயில் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை இன்று நண்பகல் 12 மணி வரை நிறுத்தப்படும் என ரயில்வே நிலையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய விபத்து ஏற்படாமல் தவிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்துக்கு இடைப்பட்ட ரத்லம் ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ரயில் தடம் புரள்வது இதோடு இரண்டாவது சம்பவம் ஆகும்.
இதைதொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக ரத்லம் ரயில் நிலையத்தில் பீர் பூமி எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டது . இதன் பின்னர் அனைத்து ரயில்வே பணியாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தது சென்று பெட்டியில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்து வருகின்றனர். அதன்படி ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு பெட்டிகள் பராமரிப்பு பணி செய்யப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.