அவர் தனித்துவம் மிக்க வீராங்கனை! பிவி சிந்துவை வெகுவாக பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

0
77

சிங்கப்பூர் ஓப்பன் பேட் மின்டன் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆசிய கோப்பை தங்க பதக்க வீராங்கனை யீ ஷீ வாங் என்பவரை 21-9,11-21,21-15 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி முதல் முறையாக இந்த தொடரை வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதளப் பதிவில் குறிப்பிடும்போது முதல் முறையாக சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டன் என்ற சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்னொரு முறையும் அவர் தான் தனித்துவமான விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார். இது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் தருணம். அதே நேரத்தில் வளர்ந்து வரும் வீரர்களுக்கும் ஒரு பெரிய தூண்டுதல் என பிரதமர் நரேந்திர மோடி அவரை பாராட்டி இருக்கிறார்.

பி.வி. சிந்து இந்த வெற்றியை தொடர்பாக தெரிவிக்கும் போது கடைசி இரண்டு தொடர்களில் கடினமான ஆட்டங்களை விளையாடினேன். ஆனால் கால் இறுதியில் மற்றும் அரையருதியில் தோல்வியுற்றது ஏமாற்றமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியும் முக்கியம் அந்த விதத்தில் சிங்கப்பூர் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிங்கப்பூர் ஓபன் விளையாடி பட்டம் வென்றது உண்மையில் நிறைவை கொடுக்கிறது. அதை உத்வேகத்துடன் இனிவரும் தொடர்களிலும் வெற்றி பெற வேண்டும், தற்போது ஓய்வெடுத்துக் கொண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்வேன் என கூறியிருக்கிறார் பிவி சிந்து.

அதோடு உலக சாம்பியன்ஷிப் போட்டி விரைவில் நடைபெறவிருக்கிறது. இதிலும் நிச்சயமாக பதக்கம் வெல்வேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.