80 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர்களின் விவரம்!!

0
51
#image_title

80 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர்களின் விவரம்!!

தமிழ் திரையுலகில் தங்களது அசாத்திய நடிப்பால் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களாக வலம் வந்த
பழம்பெரும் நடிகர்களின் வயது குறித்த விவரம் இதோ.

1.சாருஹாசன்

கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமல்ஹாசனின் சகோதரர் ஆவார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம் ,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக பணியாற்றி இருக்கிறார்.கடந்த 1931 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 92 வயதாகிறது.

2.ஏ.வி.எம் ராஜன்

இவர் கடந்த 1963 ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.தமிழில் பல பல படங்களில் நடித்துள்ள இவரின் முதற்படம் ‘நானும் ஒரு பெண்ணும்’.இதனை தொடர்ந்து எங்கள் தங்கம்,தில்லானா மோகனாம்பாள்,மேஜர் சந்திரகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.கடந்த 1935 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 88 வயதாகிறது.

3.வெண்ணிறாடை மூர்த்தி 87

கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிறாடை’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ் பெற்றார்.அதனை தொடர்ந்து 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து குணச்சித்திர நடிகராகவும்,நகைச்சுவை நடிகராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்தார்.நடிப்பை தாண்டி திரைக்கதை எழுத்தாளர்,சித்திராலயா என்ற திரைப்பட வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.கடந்த 1936 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 87 வயதாகிறது.

4.கவுண்டமணி

தமிழ் படங்களில் வில்லன்,கதாநாயகன்,நகைச்சுவை நடிகர்,குணச்சித்திர நடிகர் என்று பல வேடங்களை ஏற்று நடித்தார்.இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடன் நடித்து இருக்கிறார்.கடந்த 1939 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 84 வயதாகிறது.

5.பாரதிராஜா

தமிழ்த் திரைப்பட இயக்குநர்,கதாநாயகன்,குணச்சித்திர நடிகர் என்று பன்முகம் கொண்டவராக இருக்கிறார்.உதவி இயக்குநராக இருந்து கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள்,நிழல்கள் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.அம்பிகா,ராதா,ராதிகா உள்ளிட்ட பல நடிகைகளை தனது படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப் படுத்தினார்.தற்பொழுது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.கடந்த 1941 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 82 வயதாகிறது.

6.சிவகுமார்

கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து மோட்டார் சுந்தரம் பிள்ளை,தாயே உனக்காக,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்தார்.நடிப்பை தொடர்ந்து சிறந்த சொற்பொழிவாளராக திகழ்கிறார்.கடந்த 1941 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 82 வயதாகிறது.

7.இளையராஜா

இசைஞானி என்று அன்போடு அழைக்கப்படும் இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளின் படங்களில் இசையமைத்துள்ளார்.இவரின் இசை மற்றும் பாடல்களால் பல படங்கள் வெற்றியடைந்து இருக்கிறது.கடந்த 1943 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 80 வயதாகிறது.

8.விஜயகுமார்

கடந்த 1961 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ வள்ளி’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்து தமிழ்
திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு வெளியான பொண்ணுக்கு தங்க மனசு,தீபம்,நீயா,அவள் ஒரு தொடர்கதை,அழகே உன்னை ஆராதிக்கிறேன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றார்.இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ரஜினி,கமல்,விஜய்,அஜித் உள்ளிட்ட முன்னனி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.கடந்த 1943 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 80 வயதாகிறது.