சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!!

Photo of author

By Jayachithra

சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!!

Jayachithra

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற மகாலிங்கேஷ்வரர் கோவில் உள்ளது. மகாலிங்கேஷ்வரை தரிசனம் செய்ய, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

மேலும் அமாவசை, பெளர்ணமி நாட்களில் பக்தர்கள் இறைவனை வாழிபாடு செய்ய நான்கு நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு சில கட்டுபாட்டுக்களும் விதிக்கப்பட்டுள்ளன,

பத்து வயதுக்கும் குறைந்த குழந்தைகள் மற்றும் அறுபது வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்கள், மலையேருவதற்கு அனுமதி கிடையாது.

எளிதில் தீ பற்றும் பொருட்க்களை எடுத்து செல்லக்கூடாது,

காலை 7 மணி முதல் மதியம் 2 மணிக்குள், பக்தர்கள் மலையேறுவதற்கென நேரம் விதிக்கப்பட்டுள்ளது.

நேரம் தாமதம் ஆகிவிட்டால் மலைக்கோவிலில் தங்க அனுமதி கிடையாது.

இந்த விதிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே மலையேற அனுமதிக்க படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.