பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம்

Photo of author

By Parthipan K

ராமர் கோவில்  பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அறக்கட்டளை சார்பில் 1984-ம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது.
தற்போது நடைபெறும் பூமி பூஜை வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அனைவருக்கும் ஏற்படும் விருப்பமாகும். கொரோனா தொற்று பரவலால் தற்போது பக்தர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. அடிக்கல் நாட்டு விழா தொலைக்காட்சி மற்றும் இணைய தளத்தில் நேரலை செய்யப்படும். எனவே மக்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.