எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

0
48

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

நாள் : 30 .7 .2020

தமிழ் மாதம்: ஆடி 15 வியாழக்கிழமை

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 1.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை. ராகு காலம்: 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: 6 மணி முதல் 7.30 மணி வரை

திதி: ஏகாதசி திதி

நட்சத்திரம்: அனுஷம் காலை 7.40 மணி வரை அதன் பின் கேட்டை.

 

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

இன்று சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுக்கு அதிகமான வேலைச்சுமை இருப்பதாக காணப்படும். யாரிடமும் உங்களது அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளியே செல்வதை தவிர்க்கவும். மறைமுக எதிரிகள் உருவாகும். வியாபாரத்தில் இன்றைக்கு புது முயற்சிகள் வேண்டாம் .திட்டமிட்டு செயல்படும் நாள்.

ரிஷபம்:

இன்று மிகவும் சந்தோஷமான நாள்.எண்ணியதை முடித்து காரியத்தில் வெற்றி பெறுவீர்கள.கல்யாண பேச்சுகள் வீட்டில் தொடங்கும். சகோதர சகோதரி வகையில் உங்களுக்கு ஒற்றுமை பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் அனைவரும் மதிக்கத்தக்க நிலையை பெறுவீர்கள். சந்தோஷமாக இருக்கும் நாள்.

மிதுனம்:

பணவரவு வரும் நாள். உங்களது நண்பர்கள் உங்களது பேச்சை மதிப்பர். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு வியாபாரத்தில் லாபம் கிட்டும். உங்களது நண்பர்கள் உங்களை ஆலோசித்து முடிவுகள் எடுப்பார்.பணி செய்யும் அலுவலகங்களில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

கடகம்:

நீண்டநாள் உள்ள பிரச்சனைகள் இன்று தீரும். குடும்பத்தின் நிலை உயர பல்வேறு முயற்சிகளை எடுப்பீர்கள்.உறவினர்கள் உங்களை மதிப்பார். அவர்களது உண்மையான முகத்தினை கண்டறிவீர்கள் .உத்தியோகத்தில் அனைவரும் உங்களுக்கு மதிப்பு கொடுப்பர். புதிய பொறுப்புகளை ஏற்று நம்பகமாக திகழ்வீர்கள். வெற்றி கொடுக்கும் நாள்.

சிம்மம்:

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் நாள். இது தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகன் அல்லது மகளுக்கு வரன் அமையும். வியாபாரத்தில் இருந்து வந்த பங்குதாரர்களில் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களது பணத்தை போராடி வசூலிப்பீர்கள். சக ஊழியர்களிடம் நட்பு பாராட்டி மகிழ்வீர்கள். போராடி வெல்லும் நாள்.

கன்னி:

அரசு அதிகாரிகளின் நட்பு என்று கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உங்கள் வீடு தேடி வரும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு கூடும். தொழிலில் திட்டம் தீட்டி செயல்படுவீர்கள். உத்யோகத்தில் உள்ள சில நுணுக்கங்களை  கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக செயல்படும் நாள்.

துலாம்:

குடும்பத்தில் அமைதி பிறக்கும். இன்றுவரை இருந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும்.களைப்பு நீங்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்தி பிறக்கும். சக ஊழியர்களின் துணைகொண்டு வேலைகளை சீக்கிரம் முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்:

இன்று உங்களது ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி எளிதில் முடிவுகளை எடுக்காதீர்கள். குடும்பச் செலவு அதிகரிக்கும். இன்று உங்களை பலர் விமர்சிக்க வாய்ப்புள்ளது தாழ்த்தி பேசவும் வாய்ப்புள்ளது அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் உங்களது வேலையை பார்க்கவும். உங்களுக்கு ஏற்படும் மறதியால் இன்று உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு:

உறவினர்களும் நண்பர்களும் நீங்கள் செய்த நன்றியை மறந்து விட்டு உங்களுக்கு எதிராக பேசுவார்கள். பிடிவாதம் கொண்டு சில வேலைகளை இன்று முடித்து காட்டுவீர்கள். செலவுகள் வரும் அதை போராடி சமாளிக்க வாய்ப்பும் வரும். வியாபாரத்தில் இன்று ஓரளவு லாபம் வரும். சக ஊழியர்களிடம் சங்கடம் பிறக்கும். அலைச்சலும் ஆதாயமும் தேடி வரும் நாள்.

மகரம்:

பிரச்சனையை எப்படியாவது சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். மனோ பக்குவமும் மன தைரியமும் அதிகரிக்கும். பழைய கடனில் பாதி கட்டும் வாய்ப்பு உண்டு. அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.எதிர்பார்த்ததைவிட வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழிலில் உள்ள அனைத்து சூட்சுமங்களையும் அறிவீர்கள். மனோ தைரியம் பிறக்கும் நாள்.

கும்பம்:

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.மனம் திறந்து பேசி மகிழ்வீர்கள். செலவுகளை செய்து விட்டு அதற்கான மாற்றங்களை தேடி பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள மேல் அதிகாரிகளிடம் இருந்து உதவி பிறக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வந்து பேசுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்:

மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பீர்கள். குடும்பத்தார் உடைய விருப்பத்தை நிறைவேற்றும் நாள்.உறவினரின் உதவி எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். வீடு மற்றும் வாகனத்தை சரி செய்வீர்கள் .அலுவலகத்தில் உங்களின் மீதுள்ள மரியாதை ஓங்கும். புதிய பாதை பிறக்கும். மகிழ்ச்சியான நாள்.

author avatar
Kowsalya