பக்தர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தல் அறிவிப்பு!!
அம்மனுக்கு உகந்த மாதமாக கூறப்படுவது ஆடி மாதம். இந்த மாதத்தில் தான் ஏராளமான பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு செல்வார்கள். இவ்வாறு ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபலமான கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் அனைத்து பிரபலமான அம்மன் கோவில்களுக்கும் ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு தரிசனம் செய்ய ஒருநாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒருநாள் சுற்றுலாவானது அதிகாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இருக்கும் என்று கூறிய நிலையில், இது கடந்த 17 ஆம் தேதி அன்றே துவங்கப்பட்டது.
இதன் முதல் கட்டமாக சென்னையில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த பதினெட்டாம் தேதி அன்று இந்த ஆன்மீக சுற்றுலாவை துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால், மதுரையில் பக்தர்கள் அனைவரும் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். மதுரையில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், அழகர்கோவில் என அனைத்து கோவில்களுக்கும் இன்று செல்ல இருக்கின்றனர்.
பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களிலும் பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு பக்தர்கள் www.ttdconline.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அல்லது ஓட்டல் தமிழ்நாடு அழகர்கோவில் ரோடு, மதுரை-2 என்ற முகவரிக்கு சென்று நேரடியாகவும் பதிவு செய்யலாம். இன்னும் விவரங்களை அறிந்து கொள்ள 6380699288. – 9176995841, என்ற தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம்.