நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் 3 முக்கிய நடிகைகள்.! மீண்டும் இணையும் பிரபல நடிகை.!

0
100

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக 3 நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக விளங்கும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும், தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘D43’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து, இவர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். மேலும், இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, ராட்சஷன் பட இயக்குனருடன் ஒரு படம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து உள்ளார்.

இதற்கு இடையே, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த நிலையில், மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிகை ஹன்சிகா அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதனை குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே 2011 ஆம் ஆண்டில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷ் மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கதாநாயகியாக ஹன்சிகா நடித்ததில் தனுஷ் மற்றும் ஹன்சிகா ஆகியோரின் ஜோடி மிகவும் அழகாக இருந்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

author avatar
Jayachithra