தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! இணையத்தில் வைரல்!! 

Photo of author

By Amutha

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! இணையத்தில் வைரல்!! 

Amutha

 தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! இணையத்தில் வைரல்!! 

நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படம் வரலாற்று பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன்,நிவேதிதாஸ் சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.