திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

Photo of author

By Vinoth

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான  மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது.

தனுஷ் நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் கலர்புல் இசை குடும்ப செண்டிமெண்ட் படமாக திருச்சிற்றம்பலம் உருவாகியுள்ளது. திருச்சிற்றம்பலம படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் அவர்களின் சிறப்பான நடிப்பிற்காக நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். இதன் மூலம் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அமோகமாகத் தொடங்கியுள்ளது. வர்த்தக அறிக்கைகளின்படி, திருச்சிற்றம்பலம் முதல் நாளில் 8 முதல் 9 கோடி வரை வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தாய் மற்றும் தங்கையின் மரணத்துக்கு தன்னுடைய தந்தைதான் காரணம் என நினைக்கும் இளைஞனின் போராட்ட வாழ்க்கையை பீல்குட்டாக சொல்லியுள்ளது இந்த திரைப்படம். தாத்தா, தந்தை & மகன் ஆகியோருக்கு இடையிலான பாசப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் பாசப் போராட்டமே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் 90 களில் வெளிவந்த பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களை நினைவூட்டும் வகையில் இந்த படம் இருப்பதாகவும் கருத்துகள் எழுந்துள்ளன.