மகன்களோடு மாஸாக தனுஷ்… அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ பிரிமீயர்

0
203

மகன்களோடு மாஸாக தனுஷ்… அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ பிரிமீயர்

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் நெட்பிளிக்ஸில் நேரடியாக ஜுலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

ஹாலிவுட்டில் உருவாகியுள்ள தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். இந்த திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் டீசர் வெளியான போது அதில் தனுஷுக்கு அதிக காட்சிகள் இல்லை. இது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸுக்கு நெருங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தனுஷுக்கு முன்னுரிமை கொடுத்து ப்ரமோஷன்கள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் இந்த படத்தின் பிரிமீயர் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதில் கலந்துகொள்ள நடிகர் தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரோடும் சென்றுள்ளார். அங்கு மகன்களோடு இருக்கும் புகைப்படங்களைப் பகிர, அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

http://https://www.instagram.com/p/Cf–YDnOMZi/?igshid=MDJmNzVkMjY=

Previous articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!
Next articleஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோல் நடந்த விபத்து! சோகத்தில் குடும்பத்தினர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here