குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவின் திருமண புகைப்படம் வைரல்!! அதிர்ந்து போன ரசிகர்கள்!!

0
148

தமிழ் சின்னத்திரையின் மூலமாக சினிமா உலகிற்கு தற்போது அறிமுகமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இருந்தாலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் புகழ் பெற்றதற்கு புகழ் தான் காரணமே. கோமாளி புகழ் இவருடன் எப்போதும் டூயட் பாடிக்கொண்டு, இவரை வைத்துக் கலாய்த்து கொண்டு இருந்ததன் காரணமாக தர்ஷா குப்தா மக்களிடையே அதிக கவனம் பெற்றார்.

இதன் காரணமாக அவருக்கு ரசிகர்கள் மேலும் அதிகமாக ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்குப் பின் இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதனை அடுத்து இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகிவரும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும், நடிகர் ராதாரவி மற்றும் மாளவிகா, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இசையமைப்பாளர் ஜிபின் படத்திற்கு இசையமைத்து உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இந்த நிலையில் கடந்த ஜூலை 10ஆம் தேதி படப்பிடிப்பு முடிவடைந்தது.மேலும் இந்த நிலையில் ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிஷி மற்றும் தர்ஷா குப்தா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனை கண்ட ரசிகர்கள் இந்த படத்தை எப்போது காண்போம் என மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து தர்ஷா குப்தாவின் ரசிகர்கள் சும்மாவே அழகு இந்த புகைப்படத்தில் இன்னும் அழகு என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Previous articleசொன்னால் நம்புவீர்களா?? பிளாஸ்டிக்கை விட பேப்பர் பைகள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது!!
Next articleசிம்புவின் அடுத்தப் படம்!! சூட்டிங் ஸ்டார்ட்!! கௌதம் மேனன் இயக்கம்!!