சொன்னால் நம்புவீர்களா?? பிளாஸ்டிக்கை விட பேப்பர் பைகள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது!!

0
75
Would you believe me if I told you ?? Paper bags are more harmful to the environment than plastic !!
Would you believe me if I told you ?? Paper bags are more harmful to the environment than plastic !!

சொன்னால் நம்புவீர்களா?? பிளாஸ்டிக்கை விட பேப்பர் பைகள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது!!

இதுவரை நாம் பிளாஸ்டிக் பைகள் தான் சுற்றுச்சூழலை பாதிக்கின்றது பேப்பர் பை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு பாதிப்பு கொடுக்கிறதோ அதற்கு இணையாக பேப்பர் பைகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எப்படி என்றால் பிலாஸ்டிக் பைகளை நாம் பயன்படுத்திவிட்டு சுற்றுச்சூழலில் எறிந்த பிறகு தான் அது மண்ணில் மக்காமல் பல வருடங்கள் சுற்றுச்சூழலை பாதித்து வரும். ஆனால் பேப்பர் பை உருவாகும் பொழுதே சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு தான் உருவாகிறது. அதாவது பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் பொழுது உருவாகும் மாசுவை விட பேப்பர் பைல்களை உருவாக்கும் பொழுது 70 சதவிகித மாசுக்கள் உருவாகிறதாம்.

இதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியின் போது கண்டு பிடித்துள்ளார்கள். மேலும் பிளாஸ்டிக் பேக் மண்ணில் மக்குவதற்கு 400 ஆண்டுகளில் இருந்து 1௦௦௦ ஆண்டுகள் வரை ஆகிறது என்று நம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதனால் தான் நாம் இதை ஈடு செய்யும் வகையில் நாம் பேப்பர் பைகளை உபயோகிக்கின்றோம். மற்றபடி பேப்பர் பை பிளாஸ்டிக் பைகளுக்கு இணையான மாசுவை தான் சுற்றுசூழளலில் ஏற்படுத்துகிறது.

author avatar
CineDesk