டோனி சிறந்த மனிதர்

Photo of author

By Parthipan K

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நிகழ்ச்சியில் டோனி பற்றி கூறும்போது அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த மனிதர் ஆவார். போட்டியின் போது எந்தவித பதட்டமும் இன்றி செயல்படுவார் அந்த திறமையே அனைவரும் பார்த்து வியக்கத்தக்கதாக உள்ளது.

மேலும் அவர் இளம் வயதிலேயே 2007 ல் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறச் செய்தது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் போட்டியின் போது அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்க மாட்டார் பவுலர்கள் நல்ல பந்தை வீசும்போதும் கூட சில சமயத்தில் அது தவறாக முடிந்து விடும் அந்த சமயத்தில் கூட பவுலர்களை பாராட்டுவார் என்று கூறினார்.