மைதானத்தில் இறங்கிய தோனி..ரசிகர்களின் ஆரவாரத்தால் அலறிய ஸ்மார்ட் வாட்ச்..!!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 34வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. சிஎஸ்கே என்றாலே தோனி தான் அவர் மைதானத்திற்குள் நுழைந்தாலே போது ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானமே அல்லோலப்படும். அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று நடந்துள்ளது.
அதாவது நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் முக்கிய பேட்ஸ் மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வழக்கத்தைவி கொஞ்சம் சீக்கிரமாகவே மைதனாத்திற்குள் இறங்கினார். அப்போது ஆட்டத்தின் முதல் பகுதியில் பேட்டிங் செய்ய தோனியை பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டதில் மைதானமே அதிர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியை காண லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர் குயின்ட்ன் டி காக் மனைவி வந்திருந்தார். தோனி மைதனாத்தில் இறங்கியபோது எழுந்த சத்தத்தை கேட்டு டி காக் மனைவி கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் காதுகளால் கேட்க முடியாத அதிக சத்தம் சுற்றுப்புறத்தில் இருப்பதாக எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளது.
மேலும், அந்த சமயத்தில் மட்டும் மைதனாத்தில் 95 டெசிபல் சத்தம் இருப்பதாகவும், இதை தொடர்ந்து 10 நிமிடங்கள் கேட்டால் காதுகள் கேட்காமல் போகும் அபயாம் இருப்பதாகவும் அந்த வாட்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் உண்மையில் தோனி மைதானத்திற்குள் இறங்கிய சமயத்தில் 124 டெசிபல் அளவு ஒலி மாசு இருந்துள்ளது. இதை டி காக் மனைவி அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை கண்ட தோனி ரசிகர்கள் அந்த பதிவை ஷேர் செய்து வருகிறார்கள்.