லண்டனில் இருந்து வெளியான தகவலின் படி தோனி இரண்டாம் இடம் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிறுவனம் வருடத்தில் ஒரு முறை இந்த தகவலை தெரிவிக்கும் அதன் படி இந்த வருடம் மோடி முதல் இடமும் தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். இதில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சாருகான், சல்மான் கான், மற்றும் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் இடம் பிடித்துள்ளனர்.
அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். பிரதமர் மோடி உலகளவில் அவர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு, ‘யூகவ்’ என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் பொதுமக்களின் கருத்துகள், புள்ளிவிவரங்களைத் திரட்டி வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், பல நாடுகளில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் பற்றி ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில், உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் இந்திய அளவில் விரும்பப்படும் நபர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பிரதமர் மோடி அதிகம் விரும்பப்படும் பிரமுகராக இருக்கிறார். உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் வரிசையில் பிரதமர் மோடி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கடந்த ஆண்டு ஆய்வில் அவர் 8-வது இடத்தில் இருந்தார். உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் பிரதமர் மோடி 4.8 சதவீதம் பெற்றுள்ளார்.
இந்தியா வில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில், அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2-வது இடத்தில் இருக்கிறார்.
அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் முதல் 20 பேரில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவருக்கு அடுத்த நிலையில் தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளார்.
இந்தியாவில் அதிகம் விரும் பப்படும் பெண்களில், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் பெண்களில் முதல் 20 இடங்களுக்குள் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோர் உள்ளனர்.
உலகளவில் அதிகம் விரும்பப் படும் பிரமுகர்களில் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இருக்கிறார். உலகளவில் அதிகம் விரும்பப்படும் பெண்களின் பட்டி யலில் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, அமெரிக்க தொலைக்காட்சி நடிகை ஓப்ரா வின்பிரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெண்களில் முதல் 5 இடத்தில் மேரி கோம், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் உள்ளனர். இவ்வாறு ‘யூகவ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி நடந்து முடிந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகம் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.