“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட்

Photo of author

By Vinoth

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட்

Vinoth

Updated on:

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் குறித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்குபவர். உண்மையில், அவருக்குப் பிறகு விளையாட்டிற்கு வந்த நாடு முழுவதும் உள்ள பல இளம் வீரர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்துள்ளார்.

ஓசூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட எம்எஸ் தோனி குளோபல் பள்ளியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் எம்எஸ் தோனி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பெரும்பாலும் மாணவர்களைக் கொண்ட ஒரு பெரிய கூட்டத்தினரிடம் அவர் பேசினார், ஒரு இளம் பெண் அவரிடம் அவரது கிரிக்கெட் ஐடல் யார் என்று  கேட்டபோது. முன்னாள் இந்திய கேப்டன், அது எப்போதும் சச்சின் டெண்டுல்கர் தான் என்று பதிலளித்தார்,

தொடர்ந்து பேசிய தோனி “ சச்சின் போலவே நான் விளையாட விரும்பினேன். ஆனால் அது கடினமானது என்று தெரிந்த பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டேன்.” எனக் கூறியுள்ளார். சச்சினோடு இணைந்து தோனி 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவரின் கேப்டன்சி காலத்தில்தான் சச்சினின் நீண்டநாள் கனவான உலகக்கோப்பையை வெல்வது நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார்.