மாரி செல்வராஜ் உடன் இணையும் துருவ் விக்ரம்!! தென்மாவட்ட கதை களத்தில் தயாராகும் புதிய படம்!!
இந்திய சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயோபிக் படங்களையே எடுப்பதற்கு இயக்குனர்கள் அதிக அளவில் முனைப்பு காட்டி வந்தனர். சினிமா பிரபலங்கள் ,ஆராயிச்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போனறவர்களின் வாழ்க்கை வரலாறுகளே படமாக எடுக்கப்பட்டது.
தமிழக விளையாட்டு வீரர் நட்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இயக்குனர் மாரி செல்வராஜ் அவர் மாமன்னன் பட வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரம் அவர்களை வைத்து பயோபிக் பிக் படத்தை இயக்க உள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
இப்பொழுது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமுக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் துருவ் விக்ரம் கபடி உடையுடன் முரட்டு தனமான தோற்றத்துடன் இருக்கிறார்.
இந்த படத்தில் அவர் ஒரு விளையாட்டு வீரர் என்று அறிவித்திருந்த நிலையில் இந்த போஸ்டர் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த போஸ்டரின் மூலம் இது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்படுகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.
இது ஒரு தென்மாவட்ட பகுதியை சேர்ந்த கதைக்களமாக இருக்கும் இரு ஓரளவு உறுதியாகி இருக்கிறது.இதற்காக நடிகர் துருவ் விக்ரம் அவர்கள் இரண்டு வருடங்களாக தயாராகி கொண்டு இருந்தார் என்றும் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான படபிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.படபிடிப்புகள் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படம் கபடி விளையாட்டு வீரர் மணத்திகணேசனின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகின்றது.