DIABETES: டெய்லி 2 டைம்ஸ் இந்த கசப்பு கசாயத்தை குடித்தால் சுகர் லெவல் சர்ன்னு குறைஞ்சிடும்!!

Photo of author

By Rupa

DIABETES: டெய்லி 2 டைம்ஸ் இந்த கசப்பு கசாயத்தை குடித்தால் சுகர் லெவல் சர்ன்னு குறைஞ்சிடும்!!

இன்று பெரும்பாலான மக்கள் மோசமான உணவு பழக்கத்தால் சர்க்கரை நோயாளிகளாகி வருகின்றனர்.இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது தற்போதைய சூழலில் கடுமையாகி விட்டது.

முதிய வயதினர் சந்தித்து வந்த சர்க்கரை நோய் பாதிப்பு இன்று பிறந்த குழந்தைகளுக்கு கூட இருக்கிறது என்பது தான் வேதனை தரக் கூடிய விஷயமாக உள்ளது.உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் தலைவலி,உடல் சோர்வு,மங்கலான பார்வை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.இதனால் உடற் வறட்சி,பசியின்மை உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

எனவே இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் கட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

1)வெற்றிலை – 2
2)வேப்பிலை – 1/4 கைப்பிடி அளவு

இரண்டு வெற்றிலை எடுத்து அதன் காம்பை நீக்கி கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் வெற்றிலை மற்றும் 1/4 கைப்பிடி அளவு வேப்பிலையை போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

1)மாவிலை – 3
2)துளசி இலை – 1/4 கைப்பிடி அளவு

ஒரு மிக்ஸி ஜாரில் 3 மாவிலை மற்றும் 1/4 கைப்பிடி அளவு துளசி இலையை போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

1)கருப்பு மிளகு பொடி – 1/4 தேக்கரண்டி
2)பட்டை பொடி – 1/2 தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் மிளகு பொடி,பட்டை பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த தேநீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.