சர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம் இதை மட்டும் குடித்து பாருங்கள்! 

Photo of author

By Amutha

சர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம் இதை மட்டும் குடித்து பாருங்கள்! 

நீரழிவு எனப்படும் சர்க்கரைநோய் மக்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய் ஆகும். இந்த நோய் இல்லாத நாடுகளே இல்லை.

மனிதனின் சிறுநீர் வெளியேற்றம் சராசரி 1500 மி.லி. அளவு அதற்கு மேல் வெளியேறும் பட்சத்தில் நீரழிவு நோயின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. பெற்றோர் இருவருக்கும் இந்த நோய் இருந்தால் சந்ததியினருக்கு 100 சதவீதம் வர வாய்ப்பு உள்ளது. இதனை மருத்துவ பரி சோதனைகள் மூலம் கண்டறியலாம்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைவாக வைத்தாலே நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். சர்க்கரையை குறைக்கும் எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். அதில் சுத்தம் செய்த ஆறு அல்லது ஏழு துளசி இலைகளை சேர்க்கவும். இதனுடன் 2 கற்பூரவள்ளி இலைகளை சேர்க்கவும். பிறகு இதில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து விட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆக மாறும் வரை நன்கு கொதிக்க விடவும்.

நன்கு கொதி வந்ததும் ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும். இதில் சுவைக்காக ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எதுவும் சேர்க்க வேண்டாம். இதை காலையில் பல் விலக்கியவுடன் ஒரு டம்ளர் சாதாரண தண்ணீர் அருந்திவிட்டு பிறகு இந்த பானத்தை குடிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் குடித்தாலே போதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வாயு தொந்தரவு, கை கால் வலி, மூட்டு வலி, உடல் சோர்வு, போன்ற எல்லாவற்றையும் சரி செய்யும்.

நமது உடலில் வாதம், பித்தம், கபம்,  ஆகிய மூன்றையும் சரியான அளவில் பராமரிக்கும். ஆஸ்துமா, சளி, இருமல் பிரச்சனைகளை சரி செய்யும். முதுமையை தள்ளிப் போடும் சரும சுருக்கங்களை சரி செய்யும் போன்ற பல்வேறு பலன்கள் இந்தப் பானத்தில் நமக்கு கிடைக்கின்றன.