டோனியை பற்றி பேட் கம்மின்ஸ் இப்படி கூறினாரா?

Photo of author

By Parthipan K

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டேவிட் வார்னர் 58 ரன்களும், பிஞ்ச் 46 ரன்கள் அடித்தாலும் ஆஸ்திரேலியா 2 ரன்னில் தோல்வியடைந்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 பந்தில் 23 ரன்கள் அடித்தாலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. 9 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பணியை செய்வது மிகவும் கடினம் என சொல்லக்கூடும். அதற்கான வழியை கண்டுபிடித்து, அந்த நபருடன் நாங்கள் செல்ல வேண்டும்.
எம்.எஸ். டோனிய போன்ற ஒருவர் இருக்க வேண்டும். எம்.எஸ். டோனி உலகின் சிறந்த வீரர். ஏனென்றால், அவர் 300-க்கு மேலான ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். எங்களுடைய வார பயிற்சி போட்டியை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் அதுபோன்ற ஏராளமான வீரர்களை பெற்றுள்ளோம்.