கோழியிலிருந்து முட்டை வந்ததா?? முட்டையிலிருந்து கோழி வந்ததா?? இதுக்கு விடை கிடைச்சுடுச்சு!!
உங்களிடம் இந்த ஒரு கேள்வியை பலர் பலவிதத்தில் கேட்டிருப்பார். ஆனால் அதற்கு உங்களுக்கு இதுவரை பதில் கிடைத்து இருக்காது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அப்படி என்ன கேள்வி என்று தானே யோசிக்கிறீர்கள்? அது கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்விதான்.
இனிமேல் உங்களிடம் யாராவது கோழி முதலில் வந்ததா? இல்லை முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்வி கேட்டால் நீங்கள் அதற்கு கண்ணை மூடிக்கொண்டு முட்டை தான் முதலில் வந்தது என்று பதில் கூறலாம். மேலும் உங்களிடம் இந்த பதிலுக்கு கோழி இல்லாமல் முட்டை எப்படி முதலில் வரும் என்று கேட்டால். அவரிடம் நீங்கள் கேட்கும் கேள்வியே தவறு என்று பதில் சொல்லி விடுங்கள். ஏனென்றால் இவர் கேட்கும் கேள்வி முட்டை முதலில் வந்ததா என்று மட்டும்தான். கோழியின் முட்டை முதலில் வந்ததா என்ற கேள்வி கிடையாது.
அதன்படி பார்க்கும் போது முட்டை என்பது முதலில் இந்த உலகில் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றிய ஒரு விடயமாகும். முட்டையிடும் உயிரினங்கள் அனைத்துமே பல மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றியதாகும். ஆனால் நம்மிடம் கேட்கும் அந்த கோழி இவ்வுலகில் தோன்றியது 10,000 வருடங்களுக்கு முன்பு தான். எனவே அதன்படி பார்க்கும் பொழுது முட்டை தானே முதலில் வந்தது. மேலும் கோழி முட்டை முதலில் வந்ததா அல்லது கோழி முதலில் வந்ததா என்று கேட்டால் அதற்கும் முட்டை தான் முதலில் வந்தது என்பது தான் பதில். இப்பொழுது இருக்கும் மாடன் கோயில்கள் அனைத்துமே இதற்கு முன்பு வாழ்ந்த உயிரினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து தான் வந்துள்ளது. அப்படி பரிணாம வளர்ச்சி அடைந்த உயிரினம்தான் ப்ரோடோ சிக்கன் என்ற கோழியில் இருந்து உருவான அந்த முட்டை தான் நாம் இப்போது வளர்த்துக் கொண்டிருக்கும் மாடன் கோழிகள். எனவே கோழி முதலில் வந்ததா? இல்லை முட்டை முதலில் வந்ததா? என்று கேட்டால் அதற்கு முட்டை தான் முதலில் வந்தது என்று பதில் கூறி விடுங்கள்.