தவறான வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா?? இனி கவலை வேண்டாம் இதை செய்யுங்கள்!!
ஆன்லைனிலும் அல்லது வங்கிக் கணக்கின் மூலமாகவோ நாம் தவறுதலாக மாற்றி ஒருவருக்கு பணம் அனுப்பி விட்டோம் என்றால் அதை திரும்ப பெறுவதற்குள் படாதபாடு படுவோம்.
இப்பொழுது இதற்கென்ற ஒரு வழி உள்ளது இவற்றின் மூலம் நாம் தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ஒரு வழிதான் charge back என்ற அமைப்பு.
இந்த charge back என்பது தவறுதலாக நாம் அனுப்பிய பணத்தை மீண்டும் நமது வங்கி கணக்குக்குகே அனுப்புவதாகும்.
முதலில் நாம் தவறுதலான அக்கவுண்டிற்கோ அல்லது பயன்படுத்தாத நிலையில் இருக்கும் வங்கி கணக்கிருக்கும் பணத்தை அனுப்பி விட்டோம் என்றால் முதலில் அந்த வங்கிகளுக்குச் சென்று retun என்று எழுதிக் கொடுக்கவும்.
பின்பு நமது வங்கி கணக்கு உள்ள வங்கிகள் நாம் அனுப்ப முயன்ற வங்கிக்கு இந்த charge back அனுப்புவார்கள்.
பின்பு நாம் அனுப்ப முயன்ற அந்த வங்கிகள் நம் யாருக்கு அனுப்பும் முயன்றோம் அவருக்கு பணம் வந்து விட்டதா என்று பார்ப்பார்கள்.
நாம் அனுப்ப முயன்ற அவருக்கு பணம் செல்லவில்லை என்றால் charge back மூலமாக பணம் திரும்ப நமது வங்கி கணக்கில் வந்துவிடும்.
இதன்மூலம் நாம் தவறுதலாக அனுப்பிய பணத்தை கூட திரும்ப பெற்றுவிடலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுவே நாம் வங்கி கணக்கு எண் அல்லது தொலைபேசி எண் தவறுதலாக போட்டு பணத்தை அனுப்பி விட்டோம் என்றால் அந்தப் பணம் அந்த நபருக்கு சென்று விட்டது என்றால் அந்த வங்கியில் இருந்து அந்த நபருக்கு அழைப்பு விடுப்பார்கள்.
வங்கி அந்த நபரிடம் உங்கள் கணக்கிலிருந்து அந்த பணத்தை reverse பண்ண அந்த நபர் அனுமதி அளித்தால் மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும்.