இவைகளை சாப்பிட்டால் போதும்!! இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்!!

0
293
#image_title

இவைகளை சாப்பிட்டால் போதும்!! இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்!!

இரும்புச்சத்து என்பது உடலில் புதிய ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் மற்றும் நம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்ல பயன்படுகிறது. மேலும் இரும்புச்சத்து என்பது உடலின் நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும். இரும்பு குறைந்த அளவில் தேவைப்படும் மிகவும் அவசியமான சத்து ஆகும். இது இயற்கையில் பெரும்பாலும் கிடைக்கிறது. இளம் வயதினர் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் அவர்களை ரத்த சோகை பாதிப்பிலிருந்து தடுக்கும். இளம் பருவத்தில் ஆண்களும் பெண்களும் ஆரோக்கிய உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதவிடாய் இரத்தப்போக்கு இருப்பதால் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை தவறாக எடுத்து வர வேண்டும். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் ஆரோக்கியமான உணவிற்கு பதிலாக பாஸ்தா பீட்சா போன்ற குப்பை உணவுகளை உண்டு வருகின்றனர். இரும்புச்சத்து உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனவே இரும்புச்சத்து நிறைந்துள்ள பொருட்களை உண்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இரும்பு சத்து நிறைந்துள்ள 5 சைவ உணவுகள்

1. பச்சை காய்கறிகள் முட்டைக்கோஸ், பிரக்கோலி, பாலா கீரை அதிக அளவில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. மேலும் கீரைகளில் அதிக அளவு இரும்புச்சத்து அதிலும் முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது.

2. பீன்ஸ் வகைகள் சோயாபீன்ஸ் கருப்பு உளுந்து போன்ற உணவுகளில் இரும்புச் சத்து இருக்கிறது. இது மட்டுமின்றி கருப்பு சுண்டல் பச்சை பட்டாணி போன்றவைகளிலும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

3. வாழைப்பூ  பொரியல் செய்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

4. பீட்ரூட் இதில் அதிக அளவு இரும்புச் சத்து நிறைந்துள்ளது . மேலும் இது ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

5. சிறுதானியங்கள் கம்பு கேழ்வரகு குதிரைவாலி ராகி அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

6. உலர் திராட்சை பேரிச்சம்பழம் போன்றவைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இந்த உலர் திராட்சை பேரீச்சம் பழத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலை தினமும் சாப்பிடுவதால் இரும்பு சத்து வேகமாக அதிகரிக்கிறது.

இது போன்ற இன்னும் பல பொருட்களிலும் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே தினமும் காலையில் பச்சை காய்கறிகள் பேரிச்சம் பழம் சிறுதானியங்கள் போன்றவைகளை உண்பதால் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

author avatar
Jeevitha