வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

0
42
#image_title

வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

கடல் மீனில் உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 உள்ளது. வாரத்திற்கு 3 முறை மீன் உணவு சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக இயங்கும். மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை சரியாகும்.

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதயநோயை கட்டுப்படுத்தலாம். மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

மீன் – 1 கிலோ

பெரிய வெங்காயம் – 4

இஞ்சி, பூண்டு விழுது – 3 ஸ்பூன்

தக்காளி – 5

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

புளி – 200 கிராம்

உப்பு – தேவையான அளவு

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 3

எண்ணெய் – தேவையான அளவு

வெந்தயம் – 1 ஸ்பூன்

மல்லி தூள் – 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 15

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் மீனை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் புளியில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

இதன் பின்னர், வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வெந்ததும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.

இதன் பின்னர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இதனையடுத்து, புளி கரைசலை ஊற்றி, அதில் தேவையான உப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்றாக கொதித்து, கெட்டியானது பிறகு மீனை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

இறக்கும்போது, சிறிதளவு கொத்தமல்லி தழை தூவினால், ஆந்திரா மீன் குழம்பு ரெடி.

author avatar
Gayathri