டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!

0
119
DIG Vijayakumar's untimely death!! A perverse decision taken in distress!!
DIG Vijayakumar's untimely death!! A perverse decision taken in distress!!

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில் உள்ள அண்ணாநகரில் காவல்துறை துணை ஆணையராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் கோயம்புத்தூரின் சரக டி.ஐ.ஜி. யாக பதவி வழங்கப்பட்டு மாற்றப்பட்டார்.

இவர் தற்போது கோவையில் உள்ள பந்தய சாலையில் இருக்கின்ற முகாம் அலுவலகத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தற்கொலைக்கான காரணத்தை காவல் துறையினர் விசாரித்த போது இவர் பெரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் காவல் துறையினர் இந்த தற்கொலைக்காண காரணத்தை விசாரித்துக்கொண்டே இருக்கின்றனர். இவரின் மரணம் காவல் துறையில் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய சங்கர் ஜிவால், விஜயகுமார் சில நாட்களாகவே மன உளைச்சலில் காணப்பட்டார் என்றும் இதனால் இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் இருந்தார் அதற்காக அவருக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது என்றும் கூறினார்.

மேலும் ஒரு நேர்மையான அதிகாரியை காவல் துறை இழந்துவிட்டது என்று தனது மன வருத்தத்தை தெரிவித்தார். இவரின் தற்கொலைக்கு பணிச்சுமை எதுவும் கரரணம் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இவரின் ஆத்மா சாந்தி அடைய அனைத்து காவல் துறை அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

Previous articleமருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
Next articleதமன்னாவின் ஹாட் டேன்ஸ்! தலைவரின் ஸ்டைல்! அனிருத் இசையில் இணையத்தில் டிரெண்ட் ஆகும் காவாலா!!