தமிழகத்தில் புதிதாக 5584 பேருக்கு கொரோனா; 78 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

0
202

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,584 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 78 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,090 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,516 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 4,23,231 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 55,44,850 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,89,777 ஆண்கள், 1,90,718 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,44,595 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,910 ஆக உள்ளது.

Previous articleஒருநாள் போட்டிக்கு திரும்பும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்
Next articleசமையலறையின் ஜன்னல் எந்த திசையில் இருக்க வேண்டும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here