இதுக்கெல்லாம் உங்க போராளி குரல் வராதா..? மூடர்கூடம் இயக்குனர் மீது திரெளபதி இயக்குனர் சாட்டையடி கேள்வி.!!

0
209

இதுக்கெல்லாம் உங்க போராளி குரல் வராதா..? மூடர்கூடம் இயக்குனர் மீது திரெளபதி இயக்குனர் சாட்டையடி கேள்வி.!!

திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 17 வயது பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய செய்தியை ஆதாரத்துடன் பதிவிட்டு மூடர்கூடம் படத்தின் இயக்குனரை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம்பூர் அருகே திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கிற இளைஞன் 17 வயதான இசுலாமிய பெண் ஒருவரை காதலிப்பது போல் நாடகமாடி அப்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகி உள்ளான். அரவிந்த் மீது உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, புகாரளித்த பெண்ணின் குடும்பத்திற்கு சிலரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனவரி ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட திரெளபதி படத்தின் டிரெய்லர் தமிழ்நாடு முழுக்க சிறப்பான வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், அனைத்து சமூக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றது. திரெளபதி படம் குறித்த கேள்விக்கு, குப்பை என பதில் அளித்த மூடர்கூடம் படத்தின் இயக்குனரை திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தகுந்த ஆதாரத்துடன் சாட்டையடி கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குனர் மோகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன?? ஹரே பாய் உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா… ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன். என்று இயக்குனரை டேக் செய்து பதிவு செய்துள்ளார். இயக்குனர் மோகனின் கருத்திற்கு நடுநிலையாளர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரெளபதி இயக்குனர் மோகனின் கேள்விக்கு பதில் வருமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Previous articleரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !
Next articleசகோதரியுடன் பாஜகவில் இணைந்த சாய்னா நேவல்: