ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

0
100

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

ரஜினி வேலு பிரபாகரனின் ஒரு இயக்குனரின் காதல் கதை என்ற படத்துக்கு உதவி செய்தது ஏன் என எழுத்தாளர் விநாயக முருகன் தன்  முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனமாக இருந்தனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகர், இயக்குனர், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை, யார் மனதையும் நோகும்படி பேசக்கூடியவர் அல்ல! ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்! எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல! ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர்.

அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், “பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். இதை இயக்குனர் வேலு பிரபாகரனும் ஆமோதித்துள்ளார்.

ஆனால் இது சம்மந்தமாக எழுத்தாளர் விநாயக முருகனின் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த பதிவு :-

பெரியார் திரைப்படம் வெளிவர நடிகர் ரஜினிகாந்த் ஐந்துலட்சம் பணஉதவி செய்ததாக சில செய்திகள் படித்தேன். அந்த திரைப்படம் வெளிவரும்போது வளசரவாக்கத்தில் இயக்குநர் வேலுபிரபாகரன் எதிர்வீட்டில்தான் நான் வசித்தேன். முதல்சுவரொட்டியை எங்கள் தெருவில்தான் ஒட்டினார்கள். அந்த திரைப்படத்தின் பெயர் ‘பெரியார்’ இல்லை. அது இயக்குநர் ஞானராஜசேகரன் இயக்கியது. அந்த திரைப்படம் வெளிவரும்போதும் சில பணப்பிரச்சினைகள். பெரியார்கழகத் தோழர்கள் சிலர் பணம் தந்து உதவினார்கள்.

அப்படியென்றால் வேலுபிரபாகரன் சொல்வது என்ன? அந்த திரைப்படத்தின் பெயர் காதல் அரங்கம். படம் ஆரம்பித்து சில பிரச்சினைகள். பிறகு படத்தின் பெயரை காதல் கதை என்று மாற்றினார்கள். பிறகு வேலுபிரபாகரனின் காதல்கதை என்று மாற்றினார்கள். அது ஒரு பிட்டுப்படம். லோபட்ஜெட் பி கிரேடு படங்கள் வெளிவந்து வெற்றிப்பெற்ற காலம் அது. வேலுபிரபாகரனின் காதல்கதை சில பிரச்சினைகளால் நின்றுபோனது. அந்தக்காலத்தில் வேலுபிரபாகரன் ரஜினியை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார். ரஜினி தன்னை யாராவது கடுமையாக விமர்சித்தால் அவர்களை அழைத்து சிறுபொருளாதார உதவி செய்து வாயை அடைத்துவிடுவார்.

தன்னை விமர்சித்த மனோரமாவுக்கு அருணாச்சலம் படத்தில் உதவி செய்தார். மன்சூரலிகானுக்கு படையப்பாவில் சிறுவேடம். இப்படித்தான் வேலுபிரபாகரனை அழைத்து சிறுபணஉதவி செய்தார். அதற்கே வேலுபிரபாகரன் காலில்விழுந்துவிட்டார். அன்றிலிருந்து ரஜினியை பாராட்டி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார். ரஜினி நல்லவர். நான்தான் அவரை தவறாக புரிந்துக்கொண்டேன் என்று ஆனந்த விகடனில் பேட்டிக்கொடுத்தார். பிறகு இன்னொரு விஷயம் எல்லா பிட்டுப்படங்களிலும் இறுதியில் ஒரு டாக்டர் வருவார். சுயஒழுக்கத்தோடு வாழ்வதுப்பற்றி ஐந்து நிமிடங்கள் போதிப்பார். அதுபோல அந்தப்பிட்டுப்படத்தில் வேலுபிரபாகரன் வந்து ஐந்துநிமிடம் பெரியார் சொன்ன கற்புநெறிகளை பற்றி பேசுவார். மத்தபடி அந்தப்படத்துக்கும், பெரியாருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. வேலுபிரபாகரன் அந்த படத்தில் நடித்த நடிகை ஹீரோயின் சிர்லி தாஸை திருமணமும் (ஏற்கனவே ஜெயதேவி எனும் நடிகை மற்றும் பெண் படத்தயாரிப்பாளரை புரட்சித்திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்) செய்துக்கொண்டார். ரஜினி உதவிசெய்தது பெரியார் திரைப்படத்துக்கு இல்லை. ஒரு பிட்டுபடத்துக்கு.

author avatar
Parthipan K