உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.
இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், தியேட்டர், கோயில்கள், சர்ச்கள், ஒயின் ஷாப்கள், பார்கள், உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.
இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் குடிமகன்கள் சாராயம் கிடைக்காமல் அல்லாடி வந்தனர். மேலும் சில மது பிரியர்கள் சாராயம் கிடைக்காத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர்.
இதற்கிடையில் சில இடங்களில் கள்ள மார்க்கெட்டில் சாராய பாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு இயக்குனர் பார்த்திபன் பேட்டி ஒன்றை அளித்தார், அதில் கூறியதாவது;
“அரசு மதுபான கடைகளை மற்றும் பார்களை மூடியுள்ள நிலையில் மது பிரியர்கள் அந்த பழக்கத்தை கைவிட முயற்சி செய்ய வேண்டும். சாராயத்தை விட அதிக போதை வேண்டும் என்றால் ‘தியானம் செய்யுங்கள்’, இந்த போத பழகிவிட்டால் அந்த போதை மறந்துவிடும்” என்று கூறியுள்ளார்.