சினிமாவில் ஒரு சில நடிகரை மட்டுமே அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.அப்படி அனைத்து ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரே நடிகர் தல அஜித் மட்டும் தான்.
தல அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இவருடைய திரைப்பயணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். யாருடைய ஆதரவும், குடும்பப் பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் சினிமாவில் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்துள்ள நடிகர் அஜித் பல்வேறு கஷ்டங்களை தாண்டி தான் இந்த உயரத்தை எட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறிய அஜித் ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருக்கிறார். என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா.?ஆனால் அது உண்மை தான் அஜித் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி என்ற திரைப்படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கியிருந்தார்.
சமீபத்திய நேர்காணலில் இது குறித்து பேசிய சுந்தர். சி ‘அந்த சமயத்தில் அஜித் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டார் என்றும் அதன் காரணமாக, சினிமாவில் இருந்து விலகுவதாக கூறினார்’. ஆனால் அதன்பின் எப்படி அவர் முடிவை மாற்றினார் என்பது தெரியவில்லை தற்போது தனது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியால் இந்த உயரத்தில் அவர் இருப்பதே ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என தெரிவித்துள்ளார்.
கார் பந்தய வீரரான தல அஜிதாதுக்கு விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அந்த சமயத்தில் அஜித் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். ஆனால், எப்படியோ தனது முடிவை மாற்றி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.