சாதி பார்த்து தான் இயக்குனர்கள் வாய்ப்பே தருகிறார்கள் – சமுத்திரக்கனி அதிரடி..!!
இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சமுத்திரக்கனி தனது நண்பரும் இயக்குனருமான சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்புரமணியபுரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இயக்கத்தை விட்டு விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.
அந்த வகையில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த கேரக்டராக இருந்தாலும், யோசிக்காமல் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் சமுத்திரக்கனி பிரபலமான நடிகராக உள்ளார். உண்மையில் தமிழைவிட தெலுங்கில் தான் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது கூடை தெலுங்கில் ராமம் ராகவம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதில் ஹீரோவின் அப்பாவாக நடிக்கும் சமுத்திரக்கனி தான் கதையின் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலைர் கூட நேற்று வெளியானது. இந்நிலையில் சமுத்திரக்கனியிடம் தமிழ் சினிமாவில் சாதி உள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்று தாமதிக்காமல் ஆம் என்று கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய அவர், “சில இயக்குனர்கள் தங்கள் சாதியை சேர்ந்தவர்களை மட்டுமே தங்கள் பட யூனிட்டிற்குள் வைத்துள்ளார்கள். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கிலும் நடக்கதான் செய்கிறது. என் மனதில் தோன்றும் கருத்துக்களை பேசுவதற்கு நான் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மலையாள சினிமாவில் இதற்கெல்லாம் இடமே கிடையாது.
சினிமா என்பது கலைஞர்களின் சங்கமம். இங்கு திறமைக்கு மட்டுமே உண்டு. ஒரு மனிதனின் திறமையை பார்த்து மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும். அவனது சாதியை பார்த்து அல்ல” என மிகவும் வெளிப்படையாக திரையுலகில் பார்க்கப்படும் சாதி குறித்து பதிலளித்துள்ளார்.